இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

ஐக்கிய நாட்டுக்கான வதிவிட பிரதிநிதிக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்.!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாட்டின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André Franche)ஆகியோருக்கு இடையே கடந்த (04)ம் திகதி திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதில், கிழக்கு மாகாணத்தில் பிரச்சினை தீர்க்கும் செயல்முறை மிகவும் திருப்திகரமான நிலையில் இருப்பதாகவும், தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் திரு. மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் கூறினார்.

மேலும், இலங்கையின் மேன்மைதங்கிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உட்பட அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நிர்வாகத்தால் தான் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார்.

இதில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *