சீன பொருட்களுக்கு மீண்டும் வரிவிதிப்பு..!
சீனா பொருட்களுக்கு மேலும் 20 சதவீத வரியினை விதித்துள்ளார்.இதன் மூலம் சீனா பொருட்கள் மீதான மொத்த வரி 145 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சீன பொருட்களுக்கான வரிகளை 145 சதவீதமாக கடுமையாக உயர்த்துவதன் மூலம் சீனாவுடனான தற்போதைய வர்த்தகப் போரை ட்ரம்ப் தீவிரப்படுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றப்பின் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார்.இதன் ஒரு கட்டமாகவே உலக நாடுகளின் பொருட்கள் மீது அதிக வரியினை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.