தீப்பரவலுக்குள்ளான படகு..!
கடந்த புதன் கிழமை காங்கோ நாட்டில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 143 பேர் உயிரிழந்துள்ளனர்.காங்கோவின் ஈக்வடூர் மாகாணத்திலிருந்து ரூகி ஆற்றில் பயணிக்கும் போது குறித்த படகில் தீ பரவியுள்ளது.
இவ்வேளையில் படகில் எரிபொருளும் இருந்துள்ளது.ஆகையினால் தீ விரைவாக பரவியுள்ளது.இதன் போதே 143 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் ஆற்றில் குதித்த நிலையில் மாயமாகியுள்ளனர்.
