சீனாவிற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவுடன் பிற நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள கூடாது..!
சீனாவிற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவுடன் பிற நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளக்கூடாது என்று சீனா எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.”சமரசங்கள் அமைதியை கொண்டுவராது.எஙகளுடைய இழப்பில் உலக நாடுகள் ஆதாயம் தேட வேண்டாம். இத்தகைய சமரச முயற்சி சர்வதேச வர்த்தகத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்கான தீர்வாகாது”. என்று தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் சீனாவுடனான வர்த்தகத்தை குறைத்துக்கொள்ளும்படி அமெரிக்க நிர்பந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமையிலேயே சீனா இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதே வேளை அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களில் ஈடுப்படும் நாடுகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது
