மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி கனடா கூட்டாட்சித் தேர்தலில் வெற்றி
2025 ஆம் ஆண்டின் கனடா கூட்டாட்சித் தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி முக்கிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி, ஜஸ்டின் ட்ரூடோவின் பதவியிலிருந்து விலகியதையடுத்து மார்ச் மாதம் கட்சி தலைவராக பொறுப்பேற்ற கார்னிக்கு முதல் தேர்தல் வெற்றியாகும்.

முன்னதாக, மார்க் கார்னி கனடா மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கிகளில் ஆளுநராகப் பணியாற்றியதன் மூலம் நிதி துறையில் வலுவான அனுபவத்தைப் பெற்றவர். அரசியலில் நேரடி அனுபவம் இல்லாதபோதிலும், அவரது நிதி நிபுணத்துவம் மற்றும் சர்வதேச அறிமுகம் லிபரல் கட்சியின் புதுமுகத்திற்கான ஆதரவாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த தேர்தலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் இறையாட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் , கனேடிய வாக்காளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, கார்னிக்கு ஆதரவை கூட்டியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கினாறனர்.
மார்க் கார்னி, தேர்தலுக்குப் பிறகு, “கனடாவின் இறையாட்சியும், பொருளாதார நலன்களும் என் தலைமையில் பாதுகாக்கப்படும்” என்று உறுதியளிக்கிறார். தற்போது அவர் பெரும்பான்மை அல்லது சிறுபான்மை அரசாக ஆட்சி அமைக்க தயாராக உள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் கனடா, புதிய தலைமையின் கீழ் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது.