தமிழ் வளம்
🌹அன்னைத் தமிழே அருந்தமிழே என்னை ஆட்சி செய்யும் பைந்தமிழே//
🌹முன்னோர்கள் வளர்த்த முத்தமிழே முதுமை உனக்கில்லை உலகினிலே//
🌹இயல் இசை நாடக வடிவங்கள் எல்லா அறமும் உனக்குள் அன்றோ//
🌹அறுசுவை உணவாய்த்தெரிகின்றாய் அன்பே உருவாய் அமைகின்றாய்//
🌹எழுதும் அன்பர் அனைவரையும் ஏணி போன்று ஏற்றி விட்டு ப் பார்க்கின்றாய்//
படிக்கும் இளஞர் மனதிற்குள் பசு மரத்தாணி போல் பதிகின்றாய்//
🌹பாடும் அனைவர் நெஞ்சினிலும் பண்பை கொண்டு வருகின்றாய்//
🌹நடிப்பில் எவரும் தோற்றதில்லை
நாவலர் கையிலும் நடனம் புரிகின்றாய்//
🌹எட்டுத் திக்கும் வலம் வந்து ஏலாதி அந்தாதி ஆகின்றாய்//
🌹சங்கம் வைத்த தமிழனுக்கு தரணி எங்கும் புகழ் தந்தாய்//
🌹அயல்நாடு எங்கும் வளர்கின்றாய் சிலருக்கு ஆட்சி மொழியாகவும் இருக்கின்றாய்//
🌹பிள்ளைத்தமிழே உன் பெருமையை பேசித் தீர்க்க முடியாது//
🌹பிள்ளைகளிடம் கொண்டு சென்று பெண்ணே உன்னை விதைக்கின்றேன்//
🌹எல்லா இன்பமும் உன்னிடமே எங்கே நானும் பிரிவ தென்று தலையால் வணக்கம் புரிகின்றேன் தயவாய்க் காக்க வேண்டுகிறேன்//
எழுதுவது : வீ மீனாட்சி மதுரை மாவட்டம். தமிழ்நாடு.