ஓவிய நாயகன்

ஓவிய நாயகனே !!!
உன்
விடா முயற்சியை
வெற்றியாகக்


உன்
கடமையை
கண்ணாக


உன்
உத்வேகத்தை
உடம்பாகக்
கொண்டு


ஓவியம் தீட்டும்
வண்ணமகனே!!!


ஒரு
உடல் ஊறுப்புகள்
இழந்தாலும்
உள்ள உறுப்புகளை
ஊக்கமாகக் கொண்டு
ஒவியம் தீட்டும்
வண்ண மகனே!!!

நம்பிக்கை”நார் மட்டும்
நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்களும்
ஒவ்வொன்றாய்
ஒட்டடிக்கொள்ளும்!!!

சரித்திர படைக்கும்
சரித்திர நாயகன்
ஓவியம் தீட்டுவதற்கு
உன்
உடல் உறுப்புகளை
விட
உன் உதிரத்தில்
ஓடும்
எண்ணம் முக்கியம்
, , உன்
காலை பேனாவாகவும்
ஓடும் உதிரத்தை
மையாகவும் கொண்டு
ஓவியம் தீட்டும்
வண்ண,மகனே!!!
உன்
உடல் வாட்டம்
உன்
உள்ளம் வாட்டம்
எல்லாம் உதிரத்தில்
கலந்து ஓவியம் தீட்ட
புறப்பட்டு விட்டதால்
உன் உடல் வற்றி விட்டதோ!!!!

ஓவிய நாயகனே
கவலைப்படாதே!!!
உன ஓவியம் ஓரு
நாள் விலையேறும்
இயற்கை உறுப்புகளை
இழந்தாலும்
உன் ஓவிய
உறுப்புகள் ஓரு
நாள் உயர்ந்து
ஓவியமே
செயற்கை
கையாக வந்து
சிறப்படைவாய்
ஓன்றை இழந்தால்
தான்”ஓன்றை பெற
முடியும் சரித்திர நாயகனே
சரிந்து விடாதே!!!
சாதனை செய்வாய்
ஓவியத்தால்
உயர்ந்து வா!!!
வல்லமையே
வடிவாக்கி
உண்மையே
உயர்வாக்கி
எழுந்து நிற்கும்
கால்களை
எழுதுகோலாகக்
கொண்டு
எழுந்து வா!!வா!!!வா!!!!!

உன் வாழ்நாள் உயர
உடல் தளர்ந்தாலும்
உள்ளம தளராதே!!
பொறுமையை
பூமியாக
வறுமையை
ஓவியமாக
வரைந்து வா!!வா!!
ஓவிய ஏணிப்படி
கொண்டு ஏறி வா வா
ஓவிய மகனே
உண்மை ஓரு நாள்
வெல்லும் வா!!!வா!!
எழுந்து வா”வா வா!!!

எழுதுவது : முனைவர்.மு.முருகேஸ்வரி
வத்தலக்குண்டு