மறைந்த மகாராணியின் உடலைத் தரிசிக்கக் காத்திருப்பதை நிறுத்தும்படி கோரப்படுகிறது.
மறைந்த பிரிட்டிஷ் மகாராணியின் பூதவுடல் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட்டிருக்கிறது. திங்களன்று நடக்கவிருக்கும் இறுதி யாத்திரைக்கு முன்னர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மக்கள் அக்கட்டடத்தின் வெளியே கடந்த நாட்களில் வரிசையில் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய காத்திருப்பு நேரம் 24 மணித்தியாலத்துக்கும் அதிகமாகும் என்பதால் காத்திருப்பதைத் தவிர்க்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் கலாச்சார அமைச்சிலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் டுவீட், “இறுதி மரியாதைக்காக லண்டனுக்குப் பிரயாணம் செய்வதைத் தவிருங்கள். நாம் காத்திருப்பவர்களின் வரிசையில் மேலும் கூட்டம் சேர்வதைத் தவிர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுகிறது,” என்கிறது. வியாழனன்று அங்கே வரிசையில் நிற்க ஆரம்பித்தவர்களின் நீளம் தற்போது எட்டுக் கி.மீ தூரத்துக்கு நீண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வரிசையில் காத்திருக்கும் மக்களிடையே சனிக்கிழமை பிற்பகலில் அரசர் சார்ள்ஸும், இளவரசர் வில்லியமும் தோன்றினார்கள். அவர்கள் அங்கே காத்திருந்தவர்களுடன் கைகுலுக்குச் சம்பாஷணையில் ஈடுபட்டனர்.
சாள்ஸ் ஜெ. போமன்