ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் இது தான்..!
பல உயிர்களை காவு கொண்ட ஒடிசா ரயில் விபத்தை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள்.அத்தனை உயிர்கள் மாண்டது ஒரு நிமிடத்தில் இது இந்தியாவை மட்டுமல்ல பல சர்வதேச நாடுகளையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த கோரவிபத்திற்கு தவறான சிக்னல் கொடுக்கப்பட்டதால் தான் பிரதான லைனில் செல்லவேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் லூப் லைனில் சென்று சரக்கு ரயிலின் பின்னால் வேகமாக மோதியது என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிக்கையின் மூலம் விளக்கமளித்துள்ளது.
கடந்த 2ம் திகதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் அதி வேக ரயில் உள்ளிட் 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம் பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதன் போது 291 பேர் உயிரிழந்ததுடன் 900பேர் காயத்திற்குள்ளானார்கள். இதற்கான விசாரணை நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் தவறான சமிக்கை வழங்கப்பட்டதே இப்பாரிய விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பொருப்பானவர்கள் தமது கடமையை சரியாக செய்யவில்லை என்ற கருத்தும் மக்கள் மத்தியில் நிலவி வருகின்றமை குறிப்பிடதக்கது.