ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்திற்கும் இடையிலான போரானது 7வது நாளாக தொடர்ந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் இஸ்ரேலானது கண்மூடித்தனமாக காஸா பகுதியில் தாக்குதல் நடத்திவருகிறது.
இதே வேளை லெபனான்,சிரியா ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் இஸ்ரேலானது தாக்குதல் நடத்தியுள்ளது.ஊடகவியலாளர்கள் தாங்கள் பணிபுரியும் செய்தி நிறுவனத்தின் உடை அணிந்திருந்த போதும் இஸ்ரேலானது தாக்குதல் நடத்தியுள்ளது.
லெபனானின் ரொய்டர் செய்தி சேவையின் நிருபரான இஸாம் அப்துல்லா கொல்லப்பட்டார். இவர் நேரடி காட்சிகளை வழங்கி கொண்டிருந்த போதே கொல்லப்பட்டார் என ரொய்டர் தெரிவித்துள்ளது.
மேலும் அல்ஜெசிரா தொலைக்காட்சியின் இரண்டு நிருபர்களும்,ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ் ன் இரண்டு நிருபர்களும் இஸ்ரேலின் தாக்குதலால் காயத்திற்குள்ளானார்கள்.
மேலும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனமும் கூடியிருந்த செய்தியாளர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடததியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை சர்வதேச ஊடக அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.