ஏவுகணை வீசிய போதெல்லாம் இது தான் இருந்தது..!
பின் தொடர்ந்தாய்…..❗
பலஸ்தீனைப் போல்
நான் உன்னை ஆதரித்தேன்
ஆனாலும் நீ என்னை
இஸ்ரேலாய் ஆக்கிரமித்தாய் ❗
அன்பென்று நான் உன்னை அனுமதித்தேன்
ஆனாலும் நீ என்னை
அடிமையாக்கி ஆள நினைத்தாய்❗
அது தெரியாது அக்கம் பக்கம் உன்னை
ஐநா போல் அங்கிகரிக்க
அவ்வப்போது
உன் ஆக்கிரமிப்பை
நீ தொடர்ந்தாய்
மறுத்து
நான் வார்த்தை என்னும்
ஏவுகணை வீசிய போதெல்லாம்
ஆணவமெனும்
அயன் டோம் கொண்டு
அடித்து நொறுக்கினாய்… ❗
நொந்து நூலாகி நான்
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
காசா போல் விட்டு
விலகி. நானிருந்தேன்…
கட்டுக் காவல்கள்
மீறி
நீ என்னை. இஷ்டம் போல்
இம்சித்தாய்…. ❗
இன்னல்கள் பல சகித்தும்
துரோகங்கள் பல பொருத்தும்
பிறந்த இடம் துறந்து
புகுந்த இடம் மறந்து
மரித்தும் மரிக்காமலும்
மனிதப்பின மாய் நான் இங்கே
விடியலுக்காக
வீதியிலே கிடந்த போதும்
விட்டு விடாமல்…. ❗
துன்பங்களாலும்
துயரங்களாலும்
துரோகங்களாலும்
பின் தொடர்ந்தாய். உன்
தந்தைஎனும் வல்லரசின்
வால்பிடித்து வழி நடந்தாய்
அடி மேல் அடி அடித்து
அக்கிரமங்கள் செய்து என்னை
அளக்களித்தாய்
அடி மேல் அடி வாங்கி
இடிந்து நொறுங்கிய
காசாவின் கட்டடங்கள் போல்
இதயத்தோடு
அமைதிக்காக ஏங்கும் அந்த பாலஸ்தீனை போல்
பரிதாபமாக நான் இங்கே
அகதியாகவாவது
அன்பு காட்டி அரவணைக்க
அரபு நாடுகளை அழைப்பது போல்
உறவுகளை நானும் அழைக்கின்றேன்
உரிமைக்காக குரல் கொடுக்க
ஒருவர் கூட இல்லை
இன்றுஎனக்காக❗
இருள் சூழ்ந்து கிடக்கும்
அந்த காசா போல்
என் எதிர் காலம்
கேள்விக்குரியாய்
வளைந்து விளக்க
சோகத்தில் மூழ்கி கிடக்க
அழிக்கத் துடிக்கும் அந்த அமெரிக்காவின் ஆணைப்படி
சுதந்திரத்தை பறித்து விட்டாய்
சொந்த பந்தங்களை சிறைப்பிடித்தாய்❗
சுற்றுச் சூழழும் செல்லடித்து
சிதறடித்தாய்
சிறகொடித்த பின்னாலும்
சிரமங்கள் பலதந்து
பின் தொடர்ந்தாய்
இன்னும்
அந்த இஸ்ரேல் போல்…❗
அ. அ. நவாஸ்.. ✍️✍️✍️