ரபா நகரில் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டமைக்கு ஐ.நா பொது செயலாளர் கடும் கண்டனம்..!
இஸ்ரேலானது நேற்றைய தினம் ரபா நகரில் சரமாரியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது.
இந்த தாக்குதலில் 23 பெண்கள் மற்றும் குழந்தைகள்,முதியவர்கள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டதாகவும் 249 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனை ஐ.நா பொதுச்செயலாளர் என்தோணி குத்ரேஸ் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ‘இந்த கொடூர மோதலிர
ல் இருந்து தங்களை காத்துக்கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை .இந்த கொடூர தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் .’என தனது எக்ஸ் தளதில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் முதல் இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் பலர் தங்களை நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.