இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு | மக்களை கவனமெடுக்க வேண்டுகோள்
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்தவிடயத்தை கருத்திலெடுத்து என்ன டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்கண்டு இல்லாது செய்வது மிக முக்கியமானது என விசேட வைத்திய நிபுணர் கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக கடந்த 5 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 25,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
பருவகாலங்களில் வரப்போகும் மழையால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.
ஆதலால் மக்களும் கவனமெடுத்து டெங்கு நுளம்புகள் பெருக்குவதற்கான சாதக சூழல் அற்றதான சூழலை பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.