பங்களாதேஷ் அணி இன்று நெதர்லாந்தை வென்றது
T20 உலகக்கிண்ணத்தொடரில் இன்று நடைபெற்ற ஒரு குழுநிலைப்போட்டியில் நெதர்லாந்து அணியை பங்களாதேஷ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
![](https://vetrinadai.com/wp-content/uploads/2024/06/image_editor_output_image-1089260470-1718308233581-785x1024.jpg)
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பங்களாதேஷ் அணியின் Shakib Al Hasan ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 64 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து தோல்வியைத்தழுவியது.
பந்துவீச்சில் ஆகக்கூடுதலாக பாகிஸ்தான் அணியின் Rishad Hossain நான்கு ஓவர்களில் 33 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார்.
இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய Shakib Al Hasan தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்படி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பு பங்களாதேஷ் அணிக்கு பிரகாசமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது