மும்பை இந்தியன்ஸின் பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன நியமனம்..!

மும்பை அணியின் பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.2017,2022 ஆகிய ஆண்டுகளில் மஹேல ஜயவர்தன மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியை 3 முறை வெற்றிக்கிண்ணத்தை சுவீகரிக்க வைத்தார்.இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் செயற்பாடுகளிலும்,பயிற்றுவிப்பாளர்களை நிர்வகிப்பது,அவர்களுடனான ஒப்பந்தம்,திட்டமிடல் போன்ற பல விடயங்களை கவனித்து வந்தார்.

இதன் காரணமாக 2023,2024 ஆகிய ஐ.பி.எல் சீசன்களில் மார்க் பௌச்சர் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி பெரிதாக சோபிக்க வில்லை.

இந்த நிலையிலேயே மஹேல ஜயவர்தன மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *