T20 ல் மேற்கிந்திய தீவுகள் வெற்றி..!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி 3 T20 போட்டிகள்,3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இதற்கமைய நேற்றைய தினம் தம்புள்ளையில் போட்டி நடைப்பெற்றது.இதில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 07 விக்கட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை எடுத்தது.

180 எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் 19.1ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து இலக்கை அடைந்து வெற்றிப்பெற்றது.

இதற்கமைய T20 தொடரில் மேற்கிந்திய தீவிகள் அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *