ஏர் இந்திய விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை..!

இந்திய விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 01 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என குர்பத்வந்த் பன்னுள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இவர் காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி யாவார்.சீக்கிய இனப்படுகொலையின் 40 வது நினைவாண்டை முன்னிட்டு ஏர் இந்தியா விமானங்கள் தாக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவர் கடந்த ஆண்டும் இவ்வாறானதொரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில்.பின்னர் அவை வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தான் மீண்டும் இந்த மிரட்டல் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *