துருக்கியில் நிலநடுக்கம் பதிவு..!
துருக்கியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.துருக்கியின் அதானாவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது.இந் நிலநடுக்கமானது கோசான் மாவட்டத்தில் சுமார் 20.13 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
எனினும் இந்நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாக வில்லை .