லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்..!
லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் நேற்று மதியம் இஸ்ரேலானது வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.பால் பெக்,பெகா,ஹோல்மேட் ஆகிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளது.இதன் போது 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதே வேளை இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை லெபனானின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,189ஆகவும் ,காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,078ஆகவும் உள்ளது.

கடந்த ஒருவடத்திற்கு மேலாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.இந்த போரில் லெபனானை தலைமையிடமாக கொண்டியங்கும் ஹிஸ்புல்லா இராணுவத்தினர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
