இஸ்ரேல் ஹிஸ்புல்லாக்கிடையிலான போர் நிறைவடைகிறது..!
இஸ்ரேல் ஹிஸ்புல்லா இராணுவத்தினருக்கு இடையில் நடைப்பெறும் போரானது நாளை நிறைவடைய வுள்ளதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பா அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.”இன்று மத்திய கிழக்கிலிருந்து ஓர் நல்ல செய்தி வந்துள்ளது.நான் லெபனான் மற்றும் இஸ்ரேல் பிரதமர்களுடன் பேசினேன்.மேலும் இந்த செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.இஸ்ரேலிற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையிலான பேரழிவுகரமான மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் திட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர் “என்று தெரிவித்துள்ளார்.
இதனிடைய இஸ்ரேலானது நேற்றைய தினம் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது.இதன் போது 23 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் லிதானி நதிக்கு அருகில் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.இதனிடைய போர் நிறுத்த இறுதி கட்ட கூட்டம் நடைப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போர் நிறுத்தம் வெற்றிப்பெற்றாள் மத்திய கிழக்கில் நடந்துவரும் போர் சூழல் நிறைவடைவதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.