இம்ரான் கான் ஆதரவாளர்கள் மேற்கொண்ட போராட்டம் நிறைவு..!
பாகிஸ்தானின் முன்னால் பிரதமரும் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் ஆதராவாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தினை மீளப்பெற்றுள்ளனர்.
இம்ரான்கான் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் வழக்கினை ஆராய்ந்த நீதிமன்றம் அவருக்கு பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும் தொடர்ந்தும் அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார் .
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை விடுதலை செய்யக்கோரியும் அவரின் ஆதரவாளர்கள் நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறிய நிலையில் 6 பொலிஸார் உயிரிழந்தனர்.இதனை தொடர்ந்து இஸ்லாமபாத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் தொடர் போராட்டத்திற்கு பின்னர் இந்த போராட்டத்தினை இம்ரான் கான் ஆதரவாளர்கள் மீளப்பெற்றுள்ளனர்.