அதிகரித்து செல்லும் தேங்காய் விலை..!
தேங்காயின் விலை அதிகரித்துள்ளதால் உணவகங்களில் தேங்காய் சம்பந்தப்பட்ட சம்பல்,தேங்காய் பால் சொதி என்பன விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு தேங்காயின் விலை 200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை முட்டை,உப்பு ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
