உக்ரைனின் ட்ரோன்களை வானிலேயே தடுத்த ரஷ்யா..!
நேற்று முன் தின இரவு ரஷ்யா மீது உக்ரைன் 68 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களை ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த இரு வருடங்களுக்கு மேலாக ரஷ்ய உக்ரைன் போரானது நீடித்து வருகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.சர்வதேச அளவில் பொருளாதாரம் பாதிப்படைந்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
