போலிச் செய்திகளை பரப்புவது எளிது-பும்ரா..!
” போலிச் செய்திகளை பரப்புவது எளிது என்று எனக்குத் தெரியும் .ஆனால் இது என்னை சிரிக்க வைத்தது.நம்ப முடியாத ஆதாரங்கள்”என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா.
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் போது முதுகில் வீக்கம் ஏற்பட்டது.இநத வீக்கம் குணமாக மார்ச் முதல் வாரம் ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக அவர் லீக் போட்டிகளில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.
இதனிடைய வீக்கம் குறைவதற்கு படுக்கையில் இருக்க வேண்டும் என்றும் 6 மாதம் வரை விளையாட முடியாது எனவும் வதந்திகள் பரவிய நிலையிலேயே பும்ரா இதனை வெளியிட்டுள்ளார்.