சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு..!
அதிக மழையுடனான வானிலை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் 5 வான்கதவுகளை 6 அங்குலமாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரு மணித்தியாலத்திற்கு பிறகு குறிப்பிட்ட வான்கதவுகளை 12 அங்குலமாக திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நீர்தேக்கத்தினை அண்மித்த மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவருத்தப்பட்டுள்ளது.