துறைநீலாவணைக்குப் பெருமை சேர்த்த சாந்தகுமார் சனுவி
சர்வதேச தாய்மொழி தினத்தினை முன்னிட்டு பங்களாதேஷ் நாட்டின் இலங்கைக்கான தூதுவராலயம் நடாத்திய தமிழ் மொழிப்பிரிவுக்கான கட்டுரைப்போட்டியில் தேசிய ரீதியில் பட்டிருப்புக் கல்விவலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை மகாவித்தியாலயத்தை சேர்ந்த சாந்தகுமார் சனுவி மூன்றாம் இடத்தினைப்பெற்று சாதனைபடைத்துள்ளதுடன் பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமைசேர்த்துள்ளார்.
இலங்கைக்கான பங்களாதேஷ் நாட்டின் தூதுவர் தலைமையில் 21. ஆம் திகதிவெள்ளிக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சர்வதேச தாய்மொழி தின வைபவத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசில்களை வழங்கிவைத்துள்ளார்.
இம்மாணவிக்கான ஆலோசனை வழிகாட்டல்களை தமிழ் பாடத்துறை சிரேஷ்ட ஆசிரியர்களான எஸ்.சிறிதரன் மற்றும் த.சுமங்களா வழங்கி வைத்தனர்.வெற்றிபெற்ற சனுவி மற்றும் வெற்றிக்காக உழைத்த அதிபர் பிரதிஅதிபர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் பெற்றோர்களும் பொது அமைப்புக்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.


