சம்மாந்துறையில் வாளுடன் சந்தேக நபர் கைது !
வாள் ஒன்றினை உடமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(23) இன்று இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இரவு வேளையில் சம்மாந்துறை பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தெடதலின் போது 39 வயதுடைய சந்தேக நபர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மலையடிக்கிராமம் 01 பகுதியில் வைத்து சென்னல்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் 2 அரை அடி நீளமான வாள் ஒன்றும் சந்தேக நபர் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.மேலும் சந்தேக நபர் சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்த வருகின்றனர்.
குறித்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸார் இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.