பதிவுகள்

பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தில் உள்ள ஹாலி எல, பசறை, கண்டகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, உவபரணகம மற்றும் சொரேனதொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பகுதிக்கு நிலை 01 இன் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *