பதிவுகள்

போராட்டத்திற்கு தயாராகும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாகத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து குரல் எழுப்பிய மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அநீதி குறித்து தெளிவு படுத்தும் ஊடகவியளாளர் சந்திப்பு இன்று திருகோணமலை ஊடக இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வழாகத்தின் – தொடர்பாடல் மற்றும் வணிகக் கற்கைகள் பீட மாணவர்கள் ஒன்றியத்தினரால் குறித்த ஊடக சந்திப்பானது முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வளாகத்தில் காணப்படும் விடுதி தொடர்பான குறைபாடுகள், உணவருந்துவதற்கன தொகுதி, மலசலகூடம் தொடர்பான குறைபாடுகள் தொடர்ச்சியாக காணப்பட்டு வந்ததாகவும், குறித்த விடயம் தொடர்பில் நிர்வாகத்திற்கு எதிராக குரல்கொடுத்த பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேருக்கு இரு வாரங்களுக்கான கல்வித் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் குறித்த மாணவர்கள் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் பாராமுகமாக இருப்பதன் காரணமாக இன்று மாலை முதல் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தாம் தயாராக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *