பதிவுகள்

காய்ச்சல், வயிற்று வலியால் இருவர் உயிரிழப்பு

காய்ச்சல் மற்றும் வயிற்று வலியுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கைதடி நாவற்குழிப் பகுதியில் வசித்த 47 வயதான பெண் ஒருவர் நேற்று (02) இரவு சளிக் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, மந்துவில் கொடிகாமத்தைச் சேர்ந்த 66 வயதான பெண் ஒருவரும் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மேற்படி இரு சடலங்களும் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *