மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மர்மபொருள் வெடித்ததில் ஒருவர் காயம்!

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள திருநீட்டுக்கேணி கடற்கரையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில், குறித்த கடற்கரையில் இருந்து மர்மபொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், குறித்த மர்மபொருள் வெடித்ததால் அங்கு பரபரப்பான நிலை உருவாகியது
4 பேர் கடற்கரைக்கு குளிக்க சென்றதில், வரதராஜன் (வயது 25) என்பவர் காயம் அடைத்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ள நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



