கல்முனையில் ‘சூப்பர் முஸ்லிம்’ தீவிரவாதம் – ஞானசாரவின் கருத்துக்களை கேட்டும் அரசு மௌனிப்பது ஏன்?

கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதக் குழுவின் தலைமைத்துவத்தை கல்முனையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் வழங்குவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகிறார்.
‘சூப்பர் முஸ்லிம்’ என்ற இந்த அமைப்பை நடத்தி வரும் மருத்துவர், ஏற்கனவே ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார் என்றும் குறித்த தேரர் தெரிவிக்கிறார்.
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற போது கலகொட அத்தே ஞானசார தேரர் இந்தக் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்த உலகம் பயனற்றது, குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கக் கூடாது, புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று பிரசங்கிக்கும் இந்த தீவிரவாதத் தலைவர், கடவுளுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்ய மக்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார் என்றும் அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.
தொடர்ந்தும் அவர் தலதா மாளிகையில் கண்காட்சி நடத்தப்பட உள்ள நிலையில், இந்த தீவிரவாதக் குழு குழப்பங்களை ஏற்படுத்தும் வாய்ப்புக் குறைவு என்றும் கூறியுள்ளார்.
இவரது கருத்துக்கள் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்ற நிலையில் இனங்களுக்கு இடையில் விரிசலையும் ஏற்படுத்துவதாக சமூக ஆரவலர்கள் விமர்சிக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து அரசு மௌனம் காப்பது இனங்களுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.