கவிதை கண்ணீர் வடிக்கிறது..!
💔💔💔💔💔💔💔💔💔💔💔 *ஒரு தலைக்காதல்*
படைப்பு; கவிதை ரசிகன்
குமரேசன்
💔💔💔💔💔💔💔💔💔💔💔
என் மனத்தறியில்
உனக்கான காதல் கவிதை நெய்யப்பட்டு கொண்டே
இருக்கிறது….
நான் சிரிப்பதை விட
அழுவதையே விரும்புகிறேன்…
மகிழ்ச்சியாக
வர மறுத்த நீ
கண்ணீராக வர
சம்மதித்து விட்டதால்…
எனது
கண்ணீர் எழுதுகோலில்
கவிதையே வடிக்கிறது….!!!
என்னை எரிக்க
நெருப்பால் முடியாது..
அதுதான்
எல்லாம்
எரித்து விட்டாதே
உன் வெறுப்பினால்…!!!
காயங்களிருந்து
வலி பிறக்கும் என்பார்கள்….
என் காயங்களிருந்து
சுகமே ! பிறக்கின்றது…

என்னை தனிமையில்
இருக்க விடுவதே இல்லை
உனது நினைவுகள்….
உன் வார்த்தை
இப்படி சுடுகிறது
உன் நாக்கு என்ன
நெருப்பினால் செய்யப்பட்டதோ? *கவிதை ரசிகன்*
💔💔💔💔💔💔💔💔💔💔💔