ஈரானுடன் அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் ஐரோப்பிய தலைவர்கள்.
அமெரிக்க அதிபர் “படு மோசமான ஒப்பந்தம்,” என்று ஈரானுடன் ஒபாமா காலத்தில் அமெரிக்கா செய்துகொண்ட அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு அதைத் தான் குப்பையில் போட்டுவிடுவேன் என்று அடிக்கடி எச்சரித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், பிரான்ஸ், ஜேர்மனி மட்டும் பிரிட்டன் நாடுகளின் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஈரானுடனனான அந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்தும் பேணுவதைத் தாங்கள் ஆதரிப்பதாக அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
“அவ்வொப்பந்தத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய விடயங்களைப் பற்றி அமெரிக்காவுடன் நெருங்கிய பேச்சுவார்த்தைகள் நடாத்தித் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்,” என்று அந்த மூன்று தலைவர்களின் அறிக்கை தொடர்கிறது.