சீன – ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டு ஒப்பந்தம் அமெரிக்காவை முகம் சுழிக்க வைக்கிறதா?

ஜேர்மனி தனது ஐரோப்பிய ஒன்றியத் தலைமைக் கால முடிவில் சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்ட முதலீட்டு ஒப்பந்தம் வரவிருக்கும் ஜோ பைடனின் தலைமையிலான அமெரிக்க அரசுக்கு ஒரு தலையிடியை உண்டாக்கியிருக்கிறது.

https://vetrinadai.com/uncategorized/eu-china-investment-deal/

ஒப்பந்தத்தின் விபரங்கள் சில தொடர்ந்தும் தெளிவுபடுத்தவேண்டிய நிலையில் இருப்பினும் இது ஐரோப்பிய ஒன்றியம் தனது சொந்தக் காலில் நிற்க ஆரம்பிப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அது மட்டுமன்றி சர்வதேசத்தால் தொடர்ந்தும் மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதாகச் சுட்டிக் காட்டப்படும் நாடான சீனாவின் முகத்துக்கு அழகூட்டுவதாகவே அமையுமென்று ஜோ பைடன் சார்பில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.    

ஜோ பைடனின் சகாக்கள் இதுபற்றி எதுவுமே வெளிப்படையாகக் குறிப்பிடாத நிலையில் டிரம்ப்பின் நெருங்கிய அரசியல் சகாக்களுக்கு இது முகத்திலடித்தாற்போலிருக்கிறது. “அமெரிக்க அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கம் முழுவதிலும் உள்ள தலைவர்கள் ஒரு புதிய அமெரிக்க அரசு நிர்வாகத்தைப் பாரமெடுக்க முன்னதாகவே, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு புதிய முதலீட்டு ஒப்பந்தத்தை நோக்கி நகர்கிறது என்று குழப்பமடைந்துள்ளனர்,” என்று டிரம்ப் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

“புதிய உலகத்துடனான இந்த முதலீட்டு ஒப்பந்தம் எங்கள் நாட்டுக்கான ஒரு புதுவருடப் பரிசு,” என்று சீனத் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *