முதல் பெண் உட்பட 2 பிரெஞ்சு வீரர்கள்மாலியில் கண்ணி வெடியில் சிக்கி பலிஒருவார இடைவெளிக்குள் இரு சம்பவம்

ஆபிரிக்க நாடான மாலியில் மேலும் இரண்டு பிரெஞ்சுப் படைவீரர்கள் கண்ணி வெடித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். மூன்றாவது வீரர் காயமடைந்துள்ளார்.

உயிரிழந்த படை வீரர்கள் இரண்டாவது ஹுசார் படைப்பிரிவைச் சேர்ந்த(2nd Hussar Regiment of Haguenau) புலனாய்வுத் துறையினர் என்று தெரிவிக்கப் படுகிறது. அவர்களில் ஒருவர் Huynh எனப்படும் 33வயதான பெண் வீரர் ஆவார். ஒரு குழந்தையின் தாயான அவர் சாஹல் பிராந்தியத்தில்(Sahel Region) 2013 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் படை நடவடிக்கைகள் ஆரம்பித்த பின்னர் கொல்லப்படுகின்ற முதலாவது பெண் படைச் சிப்பாய் ஆவார்.

மாலியின் வடகிழக்குப் பகுதியில் மெனகா (Ménaka Region) பிராந்தியத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான வேவுப் பணியில் ஈடுபட்டிருந்த சமயமே அவர்களது வாகனம் சக்தி மிக்க கண்ணி வெடியில் சிக்கியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி அறிந்து அதிபர் மக்ரோன் கவலை வெளியிட்டிருக்கிறார் என எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது.இதே பிரதேசத்தில் கடந்த ஒருவார இடைவெளியில் நடந்த மற்றொரு கண்ணி வெடித் தாக்குதலில் மூன்று பிரெஞ்சு வீரர்கள் பலியாகியமை தெரிந்ததே.

https://vetrinadai.com/news/mali-frence-army-mines-dead/

இஸ்லாமிய தேச தீவிரவாதிகளுடன் சேர்ந்து மாலியில் செயற்பட்டு வரும் அல்கெய்டா ஆதரவுக் குழு ஒன்று அத் தாக்குதலுக்கு உரிமைகோரி இருந்தது.சாஹல் பிராந்தியத்தில் ஜி5 எனப்படும் மொறிற்ரேனியா, சாட், மாலி, புர்ஹினா பாஸோ, நைகர் (Mauritania, Chad, Mali, Burkina Faso, Niger)ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டணிப்படைகளுடன் இணைந்து 5ஆயிரத்து 100 பிரெஞ்சுத் துருப்பினர் ஜிஹாத் எதிர்ப்பு இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *