அமெரிக்க வெளிவிவகார அமைச்சரைச் சந்திக்க மறுத்தார்கள் ஐரோப்பிய தலைவர்கள்.
அமெரிக்காவின் வெளிநாட்டமைச்சர் தனது பதவிக்காலத்தின் கடைசிப் பிரயாணமாகத் திட்டமிட்டிருந்த லக்சம்பெர்க், பிரஸல்ஸ் பயணத்தை ரத்து செய்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பயணத்தில் சந்திக்கவிருந்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மைக் பொம்பியோவைச் சந்திக்க மறுத்துவிட்டதே அதன் காரணம்.
அமெரிக்க பாராளுமன்றக் கட்டடக் கலவரத்தின் பின்னர் டிரம்ப்புடன் உள்ள தொடர்பை அறுத்துக்கொள்ளாத மைக் பொம்பியோவைச் சந்திக்க ஐரோப்பியத் தலைவர்கள் விரும்பவில்லை. அத்துடன் நாட்டோ தலைவருடன் பொம்பியோ பிரஸல்ஸில் திட்டமிட்டிருந்த சந்திப்பும் ரத்தாகியது.
இதுபற்றிய அமெரிக்க வெளி நாட்டுக்காரியாலய அறிவிப்பில் காரணமாக “ஜனாதிபதி மாற்றம்” என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பொம்பியோவைச் சந்திக்க மறுத்தது பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்