2020 இல் பொருளாதார வளர்ச்சியைக் அனுபவித்த ஒரேயொரு நாடாக சீனா.
தளராமல் தொடர்ந்த ஏற்றுமதி கடந்த வருடம் உலகின் நாடுகளிலெல்லாம் பொருளாதாரம், பெருந்தொற்றால் ஸ்தம்பித்திருந்த போதிலும் சீனாவில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவின் ஏற்றுமதி 3.6 விகிதத்தால் அதிகரித்து இறக்குமதி 1.1 விகிதத்தால் குறைந்திருக்கிறது.
நவம்பர் மாதத்தில் 21.1 விகிதத்தாலும், டிசம்பரில் 18.1 விகிதத்தாலும் ஏற்றுமதி வளர்ந்திருக்கிறது. சீனாவின் சில பாகங்களிலும் உண்டாகியிருக்கும் கொரோனாத் தொற்றுக்கள் நாட்டின் பொருளாதாரத்தை 2021 இல் பாதிக்கலாம் என்றாலும் புத்துயிர் பெற்றுவரும் சர்வதேச வர்த்தகம் சீனாவுக்கும் இழுப்புச் சக்தியாகப் பயன்படும் என்று கருதப்படுகிறது. அத்துடன் சீனா தனது நட்பு நாடுகளுக்குத் தனது கொவிட் 19 தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்வதன் மூலமும் கணிசமாகச் சம்பாதிக்கும். சீனாவுக்கு அடிப்படைப் பலமாக இருந்துவரும் உள்நாட்டுக் கொள்வனவுச் சக்தியால் 2021 இலும் சீன வர்த்தகம் வெளிச்சத்தையே காணும்.
சீனா சந்திக்கக்கூடிய ஒரு முக்கிய பிரச்சினைகளாகச் சீனாவின் நாட்டின் பணமதிப்பு அதிகமாவதாவதும், சர்வதேசச் சந்தையில் அடிப்படைப் பொருட்களின் விலை அதிகமாவதும் சுட்டிக்காட்டப்படுகிறது. அவை சீனாவின் ஏற்றுமதி வருமானத்தில் ஒரு பகுதியை விழுங்கிவிடும்.
அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளைப் பொறுத்தவரையில் டிரம்ப் சீனாவுடன் செய்துகொண்ட முதல்கட்ட ஒப்பந்தத்தையோ சீனாமீது விதித்த வரிகளையோ உடனடியாக ரத்து செய்யப் போவதில்லையென்று ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்