“விரைவில் நாம் பெண் நீதிபதிகளை நியமிக்கவிருக்கிறோம்,” என்கிறார் ஹிந்த் அல் – ஸாஹித்.
“நீதித்துறையில் ஏற்கனவே சுமார் 2,000 பெண்கள் வெவ்வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மிக விரைவில் நாம் நீதிபதிகளாகவும் பெண்களை நியமனம் செய்து அறிவிக்கவிருக்கிறோம்,” என்று சவூதி அரேபியாவின் பெண்கள் நிலைமையை உயர்த்த அமர்த்தப்பட்டிருக்கும் பிரத்தியேக அதிகாரி தெரிவித்தார்.
சவூதி அரேபியா தனது மக்கள் ஆரோக்கிய அமைச்சில் பெண்கள் 30 விகிதமாகவும், கல்வியமைச்சில் 50 பெண்கள் விகிதமாகவும் பதவிகளில் நியமித்திருக்கிறது. நாட்டின் இளவரசனின் சவூதி அரேபியாவுக்கான 2030 ம் ஆண்டுக்கான குறிக்கோளில் பெண்களை நாட்டின் சகல துறைகளின் உயர்மட்டங்களிலும் பணியிலிருத்தவேண்டும் என்பதும் ஒரு முக்கிய பகுதியாகும்.
2025 இல் சவூதி அரேபியாவின் தொழிலாளர்களில் 25 விகிதமானவர்கள் பெண்களாக இருக்கவேண்டும் என்ற குறியை ஏற்கனவே தாண்டி 31 விகிதத்தை எட்டிவிட்டதாக ஹிந்த் அல்- ஸாகித் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்