பதவியிலேறியவுடன் தடாலடியாக டிரம்ப்பின் முடிவுகள் சிலவற்றைக் கிழித்தெறிந்தார் ஜோ பைடன்.
“இவைகளை ஆரம்பிக்க இன்றையதைவிட நல்ல நேரம் வேறெப்போவும் கிடையாது,” என்று குறிப்பிட்ட ஜோ பைடன் தனது அலுவலகத்தினுள் நுழைந்து மீண்டும் பாரிஸ் ஒப்பந்த இணைவு, குடியேற்றச் சட்டங்களில் மாற்றம் மற்றும் கொரோனாப்பரவல் தடுப்பு விடயங்களிலான கோப்புக்களில் கையெழுத்திட ஆரம்பித்தார்.
மெக்ஸிகோ எல்லையில் கட்டப்படும் மதில் நிறுத்தப்பட்டது, மீண்டும் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பில் இணைதல், அரச கட்டடங்கள் அனைத்திலும் முகக்கவசங்கள் அணிதல், சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் Keystone XL எரிநெய் வழிகளை நிறுத்துதல் போன்ற மேலும் சில முடிவுகளிலும் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
பதவியேற்கும் முதல் நாளே முக்கிய முடிவுகளில் கையழுத்திடும் மூன்றாவது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனாகும். ஏற்கனவே அதைச் செய்த இருவரும் ஒவ்வொரு கோப்பிலேயே கையெழுத்திட்டார்கள். இரண்டாவது நாளில் மேலும் பல டிரம்ப் முடிவுகள் மாறுதலாகிக் கையெழுத்துக்குத் தயாராகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்