பல நாட்களாகத் தொடரும் மழை, வெள்ளத்தால் ஆஸ்ரேலியாவில் 17 பேர் இறப்பு.
ஆஸ்ரேலியாவின் சில பகுதிகளில் கடந்த நாட்களில் இடைவிடாமல் இடைவிடாமல் பெய்து வரும் மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே 17 பேர் இறந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஞாயிறன்றும் தொடர்ந்து கடும் மழை சில பகுதிகளில் தொடர்கிறது. நியூ சவுத் வேல்ஸ், குயீன்ஸ்லாந்து மாநிலங்களில் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு வருடத்தில் பெய்யக்கூடிய மழையை ஒரே வாரத்தில் பெற்றிருக்கின்றன நியூ சவுத் வேல்ஸின் வடக்குப் பகுதியும், குயீன்ஸ்லாந்தின் தென் பகுதியும். அந்தக் கடுமையான காலநிலையில் பல்லாயிரக்கணக்கானோர் தமது வீடுகளை இழந்து வெளியேறியிருக்கிறார்கள். முக்கிய வீதிகள் பல வெள்ளத்தால் நிறைந்திருக்கின்றன. பண்ணை மிருகங்களும் பல்லாயிரக்கணக்கில் அடித்த வெள்ளத்தால் அள்ளிச்செல்லப்படிருக்கின்றன.
ஆஸ்ரேலியாவின் அதிக மக்கள் வாழும் நகரமான சிட்னி பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. வானிலை அவதானிப்பு நிலையம், “தொடர்ந்தும் சில நாட்கள் கடுமையான மழை இப்பகுதிகளைத் தாக்கும்,” என்று எச்சரித்திருக்கிறது.
மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளை மீண்டும் முன்னைய நிலைக்குக் கட்டியெழுப்ப மாதங்கள் பல ஆகும் என்கிறார்கள் அதிகாரிகள்.
சாள்ஸ் ஜெ. போமன்