விறுவிறுப்பான போட்டி- பாவலன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் புளூஸ்-ஹாட்லியைற்ஸ் வசம்
வருடாவருடம் நடைபெறும் பாவலன் ஞாபாகார்த்த வெற்றிக்கிண்ணம் இந்த வருடம் புளூஸ்-ஹாட்லியைற்ஸ் வசமானது.
பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவனும் கல்லூரி காலத்திலிருந்து கிரிக்கெட் வீரனுமாக திகழ்ந்த பாவலன், 2015ம் ஆண்டு, மைதானத்தில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விபத்தில் உயிர் நீர்த்தவர். அந்த மிக சிறந்த கிரிக்கெட் வீரனை நினைவுகூர்ந்து வருடாவருடம் நடைபெறும் மென்பந்து சுற்றுப்போட்டி இந்த வருடமும் ஐக்கிய இராச்சிய ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக (Hartleyites Sports Club UK) ஏற்பாட்டில் The Old Tifin மைதானத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
தற்கால கோவிட் 19 சூழ்நிலைகளால் கழக வீரர்கள் மற்றும் விருந்தினர்கள் வருகையோடு கொவிட் 19க்குரிய கட்டுப்பாடுகளுடன், மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த பாவலன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண போட்டியில் நிறைவில் புளூஸ் ஹாட்லியைற்ஸ் (Blue Hartleyites)அணியை எதிர்த்து யெலோஸ் ஹாட்லியைற்ற்ஸ் (Yellows Hartleyites) அணி ஆடியது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற Blue Hartleyites அணித்தலைவர் மகிந்தன்,தன் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.
Yellow Hartleyites அணித்தலைவர் குபேரன் மிக சரியாக வியூகங்களை நெறிப்படுத்தி களத்தடுப்பில் தன் அணியை ஈடுபடுத்தினார்.
நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் Blues Hartleyites அணி 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 125 ஒட்டங்களை குவித்தது.முக்கியமாக கிரிதரன் 45 ஒட்டங்களை ஆட்டமிழக்காது விளாசியதும் அணித்தலைவர் மகிந்தன்,ஜோர்ஜ்,சாந்தகுமார்,திருக்குமரன் ஆகியோர் பெற்ற ஒட்டங்களோடும், இந்த 125 என்ற மொத்த ஒட்டங்களை பெறப்பட்டது.பந்துவீச்சில் ஏ.ன்.ரமணன் இரண்டு விக்கட்டுக்களை ஒரே ஒவரில் கைப்பற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Yellows Hartleyites அணி 95 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.சந்திரகாந்தன் செந்தூரன் 22 ஒட்டங்களையும், ஆர் ஜி பிரசாத், ரமணன், செந்தூரன் ஆகியோர் இணைந்து எடுத்த ஒட்டங்களோடு இந்த 90 என்ற மொத்த ஒட்டங்களை பெற முடிந்தது.துடுப்பெடுத்தாட ஆரம்பித்தபோது ஓட்ட வேகம் சிறப்பாகவே அமைந்து வெற்றிவாய்ப்புகளை அதிகம் கொண்டிருந்த Yellows Hartleyites அணி மள மள என்று விக்கெட்டுக்களை இழக்க வெற்றிவாய்ப்பு பறிபோனது.இது போட்டியின் விறுவிறுப்புக்கு காரணமானது.பந்து வீச்சில் கிரிதரன்,குமரன்,மகிந்தன் ஆகியோர் Blues Hartleyites சார்பில் மிளிர்ந்தனர்.
நிறைவில் Blues Hartleyites அணி 30 ஒட்டங்களால் வெற்றிபெற்று பாவலன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை தம் வசப்படுத்தியது.
பாவலன் ஞாபகார்த்த வெற்றிகிண்ணத்தை அணித்தலைவர் மகிந்தனுடன் அணி வீரர்கள், ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக தலைவர் திரு அருந்தவராஜாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்கள்.
இந்த விழாவை ஊக்கமளிக்கும் வண்ணம் ஹாட்லி கல்லூரி பழைய மாணவர்களும் கழக மற்றும் விளையாட்டு நலன்விரும்பிகளும் பங்குபற்றி ஊக்கமளித்திருந்தார்கள்.
குறிப்பாக பரிசளிப்பு நிகழ்வின் ஆரம்பத்தில் திரு.ஏ.என்.சிவராஜா, திரு.அருள்நந்தி,திரு.ரவிராஜன் மற்றும் திரு.மயில்வாகனம்(MBE) ஆகியோர் இந்த நிகழ்வின் சிறப்புகளை பற்றி உரையாற்றிருந்தார்கள்.
பங்குபற்றிய சிறார்களுக்களுகான பதக்கங்களும் இந்த வருட கிரிக்கெட்டில் சிறப்பாக திறனை வெளிப்படுத்திய கழக வீரர்களுக்கும் பதங்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.