ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் காண்டீபன் நினைவில் பட்மின்ரன்

இங்கிலாந்தின் ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக (Hartleyites Sports club UK) ஏற்பாட்டில் மறைந்த அமரர் காண்டீபன் அவர்கள் நினைவில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்மின்ரன் ( Badminton) சுற்றுப்போட்டி கடந்த நவம்பர் மாதம் 5 திகதி இடம்பெற்றது.

கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஐக்கிய இராச்சியத்தில் இயங்கிவரும் ஹாட்லியைற்ஸ் விளைய்ட்டுக்கழகம், கடந்த காலங்களில் கிரிக்கெட் விளையாட்டில் தங்கள் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வந்து, தற்சமயம் பட்மிண்டன் விளையாட்டிலும் பலரையும் ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தின் ஆரம்பமாக இந்த சுற்றுப்போட்டியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பட்மிண்டன் விளையாட்டுத்துறையில் ஆர்வத்தை வெளிப்படுத்தியவரும் தன் நிறைவுக்காலம் வரை ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழத்தின் உறுப்பினராக தன் சமூக பங்களிப்பை வழங்கிய, அமரர் காண்டீபன் நினைவில் இந்த பட்மின்ரன் சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர்.

குறித்த சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வை அமரர் காண்டீபன் அவர்களின் குடும்பத்தின் சார்பில் அவரின் குழந்தைகள் வருகை தந்து ஆரம்பித்து வைத்தமை நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

குறித்த இந்த பட்மின்ரன் சுற்றுப்போட்டி இந்தவருடம் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாளர்களுடன் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் இங்கிலாந்து வாழ் பழைய மாணவர்கள் மட்டுமே பங்குபற்றும் போட்டியாக இடம்பெற்றிருந்தது.

அதேவேளை குறித்த போட்டி இங்கிலாந்தின் வெம்ளி நகர Preston Manner School உள்ளக அரங்கில் இடம்பெற்றிருந்தது

குறித்த சுற்றுப்போட்டியின் வெற்றியாளர்களாக சிவயோகநாதன் தலைமையில் விளையாடிய ,அஸ்வின், கஜேந்திரா, மற்றும் தக்கீஷன் ஆகியோர் தெரிவாகியிருந்தனர்.

உலகளாவிய ரீதியில் பல பட்மின்ரன் விளையாட்டு ஆர்வலர்கள், தமிழர்கள் தங்கள் பட்மிண்டன் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று வரும் நிலையில் , எதிர்காலத்தில் மிகப்பெரியளவில் இந்த சுற்றுப்போட்டியை முன்னெடுக்கவும் , கழகம் சிந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *