பாவலன் நினைவு வெற்றிகிண்ணம்|° விறுவிறுப்பான போட்டியின் நிறைவில் சமநிலை

மகிழ்ச்சியான ஒரு மைதான  நிகழ்வு  Hartleyites Sports Club UK  இன் SUMMER fiesta 2021

ஐக்கிய இராச்சிய ஹாட்லியர்கள் விளையாட்டுக்கழகத்தினால் (Hartleyites sports club uk)    நடாத்தப்பட்ட  பாவலன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண துடுப்பெடுத்தாட்டப்போட்டி விறுவிறுப்பான போட்டியாக நடைபெற்று சமநிலையில் நிறைவுற்றது. இதே சமநேரத்தில் முற்றுமுழுதான மைதான மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக Summer Fiesta 2021 நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

ஆரம்பத்தில் ஹாட்லியர் விளையாட்டுக்கழக நலன்விரும்பிகள் அணிக்கும் ஹாட்லியர் விளையாட்டுக்கழக அணிக்குமான நட்பு ரீதியான துடுப்பெடுத்தாட்டபோட்டி இடம்பெற்றது.இருபதுக்கு இருபது போட்டியாக இடம்பெற்ற இந்த போட்டி, போட்டியின் இறுதிவரை விறுவிறுப்பாக இடம்பெற்று, நலன்விரும்பிகள் அணி நிறைவில் வெற்றிபெற்றிருந்தது.

தொடர்ந்து பாவலன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண போட்டிக்கான தொடக்க நிகழ்வுகள்  சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

முன்னதாக பிரித்தானியக்கொடியை திரு.ரவிராஜன் அவர்கள் ஏற்றிவைக்க ஹாட்லியைற்ஸ் விளையாட்டுகழகக்கொடியை கழகத்தின் தலைவர் திரு அருந்தவராஜா அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து நாணயச்சுழற்சிக்காக Hartleyites Blues மற்றும் Hartleyites Yellows ஆகிய அணிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.

Hartleyites Blues,Hartleyites Yellows ஆகிய அணிகளின் தலைவர்களாக ஹாட்லிக்கல்லூரியின் காலங்களில் முன்னணி விளையாட்டுவீரர்களாக திகழ்ந்த திரு பிரதீபன் மற்றும் திரு சுகிர்தன் ஆகியோர் தம் அணிகளை நெறிப்படுத்தியிருந்தனர்.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Hartleyites Yellows அணியின் தலைவர் சுகிர்தன் ,முதலில் தனது அணியை துடுப்பெடுத்தாடப் பணித்தார். நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் Hartleyites Yellows அணி 5 விக்கெடுக்களை இழந்து 70 ஓட்டங்களைப் பெற்றிந்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Hartleyites Blues அணி 10 ஓவர்கள் நிறைவில் அதே 70 ஓட்டங்களைப்பெற்று போட்டி சமநிலையில் முடித்தது.

போட்டியின் சிறந்த பந்துவீச்சாளராக தயானும் சிறந்த துடுப்பாட்ட வீரராக சுகிர்தனும் தெரிவு செய்யப்பட்டனர். சகலதுறை வீரராக துடுப்பாட்டம் ,பந்துவீச்சு களத்தடுப்பு அனைத்திலும் பிரகாசித்த நவரங்கன் தெரிவுசெய்யப்பட்டார்.

நிறைவில் பாவலன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டனர்.

துடுப்பெடுத்தாட்ட போட்டிகள் நடந்துகொண்டிருந்த சமவேளையில் சிறுவர்களுக்கான மைதான நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.பல சிறுவர்களும் மகிழ்ச்சியுடன் பங்குபற்றி, நிகழ்வில் பங்குபற்றிய பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் ஆண்கள் பெண்கள் குடும்பங்களுக்கான ஜனரஞ்சகப் போட்டி,நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் பங்குபற்றி நிகழ்வில் நிறைவான மகிழ்ச்சிபெற ஏதுவாக அனைத்து நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

நிகழ்வின் சிறப்பைக்கண்ட பலரும் தாமாகவே முன்வந்து தம்மை கழக அங்கத்தவர்கர்களாக இணைத்தைக்கொண்டதை அவதானிக்ககூடியதாகவும் இருந்தது.

முற்றிலும் இலவசமான மகிழ்ச்சிக்கொண்டாட்டமாக, ஹாட்லியர்கள் விளையாட்டுக்கழக(HARTLEYITES sports club uk ) இந்தவருட summer Fiesta 2021 நிகழ்வுகள் நிறைவில் வெற்றிபெற்றவர்களுக்கான பதக்கம் வழங்கும் நிகழ்வுகளுடன் நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *