Hartleyites Sports club UK ஏற்பாடு செய்யும் Summer Fiesta 2021 ஜூலை மாதம் 25ம் திகதி

ஐக்கிய இராச்சிய ஹாட்லியர் விளையாட்டுக்கழகம் (Hartleyites Sports club UK 🇬🇧) மிகச்சிறப்பான ஏற்பாடுகளோடு இரண்டாவது தடவையாக இந்தவருடமும் Summer Fiesta 2021 ஐ (கோடைத்திருவிழா) நடாத்தவுள்ளது. ஜுலை மாதம்25ம் திகதி 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த நிகழ்வு மாலை 8 மணிவரை தொடரவுள்ளது.

இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடியபோது மைதானத்தில் மறைந்த ஹாட்லியின் விளையாட்டுவீரன் பாவலன், ஞாபகார்த்தக வெற்றிக்கிண்ண துடுப்பெடுத்தாட்டப்போட்டியை முன்னிலைப்படுத்தி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனோடு இணைந்து ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக நலன்விரும்பிகள் அணியும் எதிர்த்து மோதவுள்ள இன்னுமோர் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் முக்கிய அம்சமாக சிறுவர்களை உற்சாகப்படுத்தும் போட்டிகளும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனோடு இணைந்து குடும்ப நிகழ்வுகள்,ஆண்கள் பெண்களுக்கான ஜனரஞ்சக நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படுவதாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் குழுவிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வு இங்கிலாந்தின் Watford நகரை அண்மித்த Bushey cricket Club மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு, முற்றிலும் இலவசமான நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *