கின்னஸ் சாதனை படைத்த டுபாயின் ஆழமான நீச்சல் தடாகம்

டுபாய் , உலகில் தன்னை உச்ச இடத்தில் வைத்துக்கொள்ள, உலகிலேயே எதையும் மிகப்பெரிதாக வைத்திருக்கும்,  அது அதன்  உத்தி ….
அது உல்லாசப்பயணிகளை எப்போதும் கவர்ந்து கொண்டு தான் இருக்கும்…

அதற்காக “மிகப்பெரிய நீச்சல் தடாகம்”  என்ற பெயரை  வெறும் ஏழு மாதங்களே வைத்திருந்த    போலந்தின் Deepspot எனும் தடாகத்தை முந்தியிருக்கிறது டுபாயின் Deep Drive .

போலந்தில் டிசம்பர் 2020 இல் திறக்கப்பட்ட இந்த நீச்சல் தடாக ஆழம் 45 மீற்றராகும்.

அதை நோக்கி உல்லாசப்பயணிகள் படையெடுக்க முன் 60 மீற்றர் ஆழத்தில் புதிதாக “Deep Drive Dubai” எனும் நீச்சல் தடாகத்தை உலகிற்கு சொல்லிவிட்டது டுபாய்…

உலகிலேயே உயரமான கட்டடம் என்ற இடத்திலிருக்கும்,
டுபாயின் புர்ஜ் காலிபாவின் உயரம் 828 மீற்றர்.
உலகிலேயே பெரிய வியாபார இடம் என்றழைக்கப்படும் “Dubai Mall” கொவிட் 19 க்கு முன்னர் மட்டும்  வருடாவருடம் 80 மில்லியன் பேரை ஈர்த்துவந்தது.

அந்த வரிசையில் டுபாயின் பிரபலத்துக்கு மேலுமொரு அணியாக ஆழமான நீச்சல் தடாகம் திகழப்போகிறது….

கின்னஸ் சாதனைகள் புத்தகத்தில் ஜூன் 27 இல் இடம்பெற்ற்றுவிட்ட இந்த  டுபாயின் ஆழமான நீச்சல் குளம் ,
உலகில் எந்த ஒரு நீச்சல் குளத்தையும் விட நான்கு மடங்கு அதிக நீரைக் கொண்டிருக்கிறது. ஆறு ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் அளவை ஒரேயடியாகக் கொண்டிருக்கும் டுபாய் நீச்சல் தடாகத்திலிருக்கும்  நீரின் கொள்ளளவு 14 மில்லியன் லிட்டர்களாகும்.
தடாக நீரின் வெப்ப நிலை எப்போதும் 30 செல்சியஸாக இருக்கும்.

இந்த டுபாய் ஆழமான நீச்சல் தடாகம் தற்போது, 
அழைக்கப்பட்ட விசேட நபர்களுக்கு  மட்டுமே திறந்திருக்கிறது.

என்றாலும் இவ்வருட இறுதியில் பொதுமக்களுக்கும் திறந்துவைக்கப்படவிருக்கிறது என்பது நீச்சலில் விருப்பமுடைய எல்லோருக்கும்  ஆனந்தமான  செய்தி….

அதிகமான சூட்டோடு கூடிய  காலநிலை ,
இப்ப இருக்கும் டுபாய்க்கு,  சூட்டை தணிக்கும் உத்தியாக கூட இந்த ஆழமான நீச்சல் தடாகம் ஆரம்பிக்கப்பட்டிருக்குமோ யாரறிவார்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *