இறுதிப்போட்டிக்கு அவுஸ்ரேலியா| பாகிஸ்தானின் கிண்ணக்கனவு தகர்ந்தது

T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தானை வெற்றிபெற்று அவுஸ்ரேலியா தகுதிபெற்றுள்ளது. இந்த சுற்றுப்போட்டியில் பலமான அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்கால் பெற்ற அபாரமான வெற்றியால் அவுஸ்ரேலிய அணி நீண்ட காலத்துக்குப்பின் T20 இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4விக்கெட்டைக்களை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களை குவித்தது. 177ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட துவங்கிய அவுஸ்ரேலிய அணி முதல் ஓவரிலேயே துரதிர்ஷ்டவசமாக முதல் விக்கெட்டை இழந்திருந்தாலும் 19வது ஓவரிலேயே இலக்கை அபாரமாக துடுப்பெடுத்தாடிக் கடந்தது.

வெறும் 17 பந்துகளில் Mathew wade அடித்த 41 ஓட்டங்கள் , 30 பந்துகளில் David warners அடித்த 49 ஓட்டங்கள் என விளாசிய ஓட்டங்கள் சேர்ந்தே இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டது.

இந்த சுற்றுத்தொடரில் சகல போட்டிகளிலும் வெற்றிபெற்று பலமான அணியாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணி ,அவுஸ்ரேலிய அணியை knock out போட்டிகளில் என்றுமே வென்றிராத அணியாக இன்றும் தோற்று தன் கிண்ணக்கனவை தகர்த்தது.

அவுஸ்ரேலிய அணி வரும் ஞாயிறன்று நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டியில் சந்திக்கவுள்ளது.

இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்ரேலிய அணியின் Mathew wade தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.