இங்கிலாந்துக்கு  T20 உலகக்கிண்ணம்|பாகிஸ்தானின் உலகக்கிண்ண கனவு தகர்ந்தது.

மெல்போர்ன் விளையாட்டரங்கில்
இன்று நடைபெற்ற T20 உலகக்கிண்ண விறுவிறுப்பான  இறுதிப் போட்டியில்  இங்கிலாந்து அணி வெற்றிபெற்று உலகக்கிண்ணத்தை சுவீகரித்தது.

போட்டியில் கடைசிவரை  பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் 6 பந்துகள் மீதமிருந்த வேளையில்  தோற்று உலகக்கிண்ணத்தை இழந்தது பாகிஸ்தான்.

நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்ப்பில் ஷான் மசூட் ஆகக்கூடுதலாக  28 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் சார்பில் Sam Curran , 4 ஓவர்கள் பந்துவீசி 12 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதல் மிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிறைவில் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 138 ஓட்டங்களை எடுத்து 5விக்கெட்டுக்களால் வெற்றிவாகை சூடியது.

இங்கிலாந்து அணியின்  இடைவரிசை துடுப்பாட்ட வீரர்களின் வேகங்குறைந்த ஆட்டம்,  போட்டியின் இடையே பாகிஸ்தான் அணியின் பக்கம் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகம் வெளிப்பட்டிருந்ததெனினும்,  Ben Stokes இன் நிதானமான ஆட்டம் இங்கிலாந்து அணியின் பக்கம் வெற்றியைக்கொண்டுவந்தது.
நிறைவு வரை ஆட்டமிழக்காது ஆடிய Ben Stokes நின்று நிலைத்தாடி 49 பந்துகளில் 52 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இன்றைய இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் அதிகூடிய திறனை வெளிப்படுத்திய Sam Curran  அறிவிக்கப்பட்டார்.

அது மட்டுமல்லாமல் தொடரின் ஆட்ட நாயகனாகவும் Sam Curran அறிவிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் ஏற்கனவே ஒருதடவை கிண்ணத்தை சுவீகரித்தது எனினும் இங்கிலாந்து அணி இரண்டாவது தடவையாக வெற்றிக்கிண்ணத்தை தனது மண்ணுக்கு கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *