ஹாட்லியைற்ஸ் நடை 2024 இன்று ஆரம்பம்|Hartleyites walk 2024| HSC Walk

வருடாவருடம் ஏப்ரல் மாதத்தில் ஒழுங்கமைக்கப்படும் ஹாட்லியைற்ஸ் நடை Hartleyites walk இந்தவருடமும் இன்று தொடங்கியது.

ஹாட்லிக்கல்லூரி பழையமாணவர்களின் கூட்டு அமைப்பான ஐக்கிய இராச்சிய ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழகம் இதை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாதம் முழுவதுமாக நடைப்பயிற்சியில் 100 km என்ற இலக்கை நிர்ணயித்து இந்த நடை ஆரம்பித்துள்ளது

உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த ஊக்கப்படுத்தும் இந்த நடைப்பயிற்சியில், பலரையும் ஈடுபட  Hartleyites Sports Club UK அழைக்கிறது.

நடையாக மட்டுமல்லாமல் ஓட்டப்பயிற்சியாக 100 km என்ற தூரத்தையோ அல்லது சைக்கிள் ஓட்டப்பயிற்சியாக 300 km என்ற தூரத்தையோ கடந்து இந்த சவாலில் உலகின் எங்கிருந்தும் பங்குபற்ற முடியும் என Hartleyites Sports Club UK அறிவித்துள்ளது.

நீங்கள் வாழும் இடங்களிலேயே தனியாகவோ அல்லது நண்பர்கள் கூட்டாகவோ நடைப்பயிற்சியில் அல்லது சைக்கிள் ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டு சவாலில் பங்குபற்றமுடியும்.

கடந்த காலங்களில் உலகின் பல பகுதிகளிலுமிருந்து  பல தமிழ் மக்கள் ஆண்கள் பெண்கள், சிறுவர்கள் என்ற வேறுபாடின்றி  பங்குபற்றியிருந்தனர் என்பதும், பங்குபற்றி சவாலில் வெற்றிகொண்ட பலர் கௌரவித்து ஊக்குவிக்கப்பட்டனர்.

வழமை போலவே இம்மாத நிறைவில் பலரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி நடைப்பயிற்சியில் ஈடுபடும் நிகழ்வும் இடம்பெறும் என்பதும் அது குறித்த மேலதிக விடயங்கள் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *