ரயில் போக்குவரத்து மூலமாக ரஷ்யாவிலிருந்து முப்பது குதிரைகள் வட கொரியாவுக்கு அனுப்பப்பட்டன..

மூன்று வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக ரஷ்யாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையேயிருக்கும் ரயில் பாதை மூலமாக சரக்குக்கப்பலில் வியாபாரம் நடந்திருக்கிறது. பிரபலமான Gray Orlov Trotter குதிரைகள் 30 ரஷ்யாவிலிருந்து வட கொரியாவுக்கு அனுப்பப்பட்டன. சுத்தமான இனக்குதிரை என்று கருதப்படும் பல்லாயிரக்கணக்கான டொலர் பெறுமதியான அக்குதிரைகள் வட கொரியாவின் பணக்காரர்களிடையே பிரபலமானவை. 

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன் குதிரைகள் வளர்ப்பது, சவாரி செய்வது போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர். 2002 இல் அவரது பிறந்த நாளுக்கு புத்தின் அதே ரகக் குதிரைகளைப் பரிசாக வழங்கியிருந்தார். 

2020 மார்ச் மாதத்தில் கொரோனாத்தொற்றுக்கள் பரவியதால் வட கொரியா தனது எல்லைகளை முழுசாக மூடியது. அதன் பின்னர் இரண்டு நாடுகளுக்குமிடையே முதல் தடவையாக வர்த்தகம் நடந்திருக்கிறது. விரைவில் ரஷ்யாவிலிருந்து மருந்துப் பொருட்கள் வட கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மேற்கு நாடுகளுடன் பொருளாதார, வர்த்தகப் பண்டமாற்றம் செய்ய முடியாத நிலையிலிருக்கும் ரஷ்யா மாற்றாக வேறு நாடுகளுடன் வர்த்தகத்தை நெருக்கமாக்கியிருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே இராணுவப் போர்த் தளபாட விற்பனைகள் நடந்து வருவதாகவும் முன்பு குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ரஷ்யா அதை மறுத்து வந்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *